மராட்டிய ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் சிமோன் ‘சாம்பியன்’ ஆண்டர்சனை வீழ்த்தினார்


மராட்டிய ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் சிமோன் ‘சாம்பியன்’ ஆண்டர்சனை வீழ்த்தினார்
x
தினத்தந்தி 6 Jan 2018 9:15 PM GMT (Updated: 6 Jan 2018 8:26 PM GMT)

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வந்தது.

புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 14–ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), தரவரிசையில் 89–வது இடம் வகிக்கும் ஜிலெஸ் சிமோனை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். 1 மணி 36 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் சிமோன் 7–6 (4–7), 6–2 என்ற நேர் செட்டில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். ஆண்டர்சனுடன் 4–வது முறையாக மோதிய சிமோன் அதில் பெற்ற முதல் வெற்றி இது தான். முன்னதாக சிமோன், அரைஇறுதியில் 6–ம் நிலை வீரர் மரின் சிலிச்சை (குரோஷியா) தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

33 வயதான சிமோன் 2015–ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு ருசித்த முதல் பட்டம் இதுவாகும். மொத்தத்தில் அவரது 13–வது சர்வதேச பட்டமாக அமைந்தது.


Next Story