டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடேனை சந்திக்கிறார், பெடரர் + "||" + Australian Open Tennis

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடேனை சந்திக்கிறார், பெடரர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடேனை சந்திக்கிறார், பெடரர்
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.
மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது நேற்று குலுக்கல் மூலம் (டிரா) நிர்ணயிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடப்பு சாம்பியன்கள் பங்கேற்பது வழக்கம். பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டு வாகை சூடிய செரீனா வில்லியம்ஸ் இந்த முறை விலகி விட்டதால், அவருக்கு பதிலாக முன்னாள் சாம்பியன் மரிய ஷரபோவாவும் (ரஷியா), ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் ‘டிரா’ நிகழ்ச்சியில் கோப்பையுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ரோஜர் பெடரர் தனது முதலாவது சுற்றில் 51-ம் நிலை வீரரான அல்ஜாஸ் பெடேனை (சுலோவேனியா) எதிர்கொள்கிறார். ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது முதல் சவாலை விக்டர் எஸ்ட்ரிலா பர்கோசுடன் (டொமினிகன் குடியரசு) தொடங்குகிறார்.

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை குறி வைத்து களம் காணும் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் தனது முதல் சுற்றில் வைல்டு கார்டு வீராங்கனை ஆஸ்திரேலியாவின் டெஸ்டானீ அய்வாவை சந்திக்கிறார். 2008-ம் ஆண்டு சாம்பியனான ரஷிய புயல் மரிய ஷரபோவா, தாட்ஜனா மரியாவுடன் மோதுகிறார். ஷரபோவா 3-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பருடன் (ஜெர்மனி) மோத வேண்டி வரலாம். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சுக்கு போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது. அவர் தனது முதல் ரவுண்டில் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனை பெலின்டா பென்சிச்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.