டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் ரபெல் நடால் வெற்றி + "||" + Australian Open Tennis In the 2nd round Rafael Nadal wins

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் ரபெல் நடால் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்
2-வது சுற்றில் ரபெல் நடால் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் வெற்றி பெற்றார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் வெற்றி பெற்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.


இதன் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 52-ம் நிலை வீரர் லினார்டோ மேயரை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 38 நிமிடம் நடந்தது.

டிமிட்ரோவ் வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் டிமிட்ரோவ் (பல்கேரியா) 4-6, 6-2, 6-4, 0-6, 8-6 என்ற செட் கணக்கில் அமெரிக்க தகுதி சுற்று வீரர் மெக்கன்சி மெக்டொனால்டை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 3 மணி 25 நிமிடம் நீடித்தது.

இன்னொரு ஆட்டத்தில் குரோஷியாவின் இவோ கார்லோவிச் 7-6 (7-3), 6-7(3-7), 7-5, 4-6, 12-10 என்ற செட் கணக்கில் யுய்சி சுஜிதாவை (ஜப்பான்) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 4 மணி 33 நிமிடம் வரை நீடித்தது. அடுத்த மாதம் 39-வது பிறந்த நாளை காண இருக்கும் இவோ கார்லோவிச் கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய அதிக வயதுடைய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

3-வது சுற்றில் 15 வயது வீராங்கனை

மற்ற ஆட்டங்களில் சோங்கா (பிரான்ஸ்), நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), மரின் சிலிச் (குரோஷியா), ஜிலெச் முல்லர் (லக்சம்பர்க்), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), பாப்லோ கார்னோ பஸ்டா (ஸ்பெயின்) ரையான் ஹாரிசன் (அமெரிக்கா), கைல் எட்முன்ட் (இங்கிலாந்து) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 15 வயதான உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்ட்யுக் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒலிவியா ரோகோவ்ஸ்காவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இதன் மூலம் 1997-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய இளம் வீராங்கனை என்ற பெருமையை மார்டா கோஸ்ட்யுக் பெற்றார்.

3-வது சுற்றில் வோஸ்னியாக்கி

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 3-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் ஜானா பெட்டை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ரைபரிகோவா (சுலோவக்கியா), கனேபி (எஸ்தோனியா), கார்லா ஸ்வரஸ் நவரோ (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், வோஸ்னியாக்கி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், வோஸ்னியாக்கி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.