டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் இறுதி போட்டியில் வோஸ்னியாக்கி (டென்மார்க்)-ஹாலெப் (ருமேனியா) + "||" + Australian Open 2018 final ‪Simona Halep-Caroline Wozniacki‬‬

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் இறுதி போட்டியில் வோஸ்னியாக்கி (டென்மார்க்)-ஹாலெப் (ருமேனியா)

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் இறுதி போட்டியில் வோஸ்னியாக்கி (டென்மார்க்)-ஹாலெப் (ருமேனியா)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி, ஹலெப் இறுதிப்போட்டியில் மோதுகிறார்கள். #AustralianOpen2018 #Simona Halep
மெல்போர்ன்

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. அரைஇறுதி ஆட்டத்தில் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) - மெர்டனிஸ் (பெல்ஜியம்) மோதினார்கள்.

இதில் வோஸ்னியாக்கி 6-3, 7(7)-6(2), என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

வோஸ்னியாக்கி இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 21-ம் நிலை வீராங்கனை கெர்பரை எதிர் கொண்டார். 

முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய ஹாலெப் 2-வது செட்டை 4-6 என இழந்தார். 3-வது செட்டில் இருவரும் ஹாலெப் 9-7 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதி போட்டியில் 2-ம் இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி உடன் 1-ம் நிலை வீராங்கனையான ஹாலெப் பலப்பரீட்சை நடத்துகிறார்.

ஆண்கள் ஒற்றையர் அரை இறுதியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)-ஹியான் சங் (தென்கொரியா), சிலிச் (குரோஷியா)-எட்மன்ட் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.