டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் + "||" + Australian Open Tennis

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், எதிராளி பாதியில் விலகியதால் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் எளிதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். #Tennis #Sports
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், எதிராளி பாதியில் விலகியதால் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் எளிதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் போபண்ணா ஜோடியும் இறுதிப்போட்டியை எட்டியது.

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 58-ம் நிலை வீரர் ஹியோன் சங்கை (தென்கொரியா) எதிர்கொண்டார். கிராண்ட்ஸ்லாமில் அரைஇறுதிச்சுற்றை எட்டிய முதல் தென்கொரிய நாட்டவர் என்ற பெருமையுடன் களம் இறங்கிய 21 வயதான ஹியோன்சங், பெடரரின் சாதுர்யமான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். முதல் செட்டில், எதிராளியின் 3 சர்வீஸ்களை முறியடித்து 6-1 என்ற கணக்கில் கைப்பற்றிய பெடரர் 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார். இதில் அவர் 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது, ஹியோன் சங், இடது கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்றார். ஆனால் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டதால் அத்துடன் போட்டியில் இருந்து விலகினார். 62 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் பெடரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி ஒன்றில் பெடரர் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைப்பது இது 30-வது முறையாகும்.

தனது 20-வது கிராண்டஸ்லாம் மகுடத்துக்கு குறி வைத்துள்ள 36 வயதான பெடரர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் மரின் சிலிச்சுடன் (குரோஷியா) பலப்பரீட்சை நடத்துகிறார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த அரைஇறுதியில் ரோகன் போபண்ணா (இந்தியா)- டைமியோ பபோஸ்(ஹங்கேரி) ஜோடி 7-5, 5-7 (10-6) என்ற செட் கணக்கில் மார்செலோ டெமோலினர் (பிரேசில்)- மார்ட்டினஸ் சாஞ்சஸ் (ஸ்பெயின்) இணையை போராடி தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

போபண்ணா- பபோஸ் ஜோடி இறுதி ஆட்டத்தில் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி (கனடா)- மேட் பவிச் (குரோஷியா) இணையை நாளை எதிர்கொள்கிறது.

முன்னதாக டைமியோ பபோஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் மகுடம் சூடினார். அவரும் பிரான்சின் கிர்ஸ்டினா மிலாடெனோவிச்சும் இணைந்து இறுதி ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ரஷியாவின் மகரோவா- வெஸ்னினா இணையை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்றனர்.

பெண்கள் பிரிவில் இன்று நடக்கும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் நட்சத்திரம் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 2-ம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியும் (டென்மார்க்) மல்லுகட்டுகிறார்கள். இதில் யார் வென்றாலும் அவர்களுக்கு அது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். இதற்கு முன்பு இருவரும் சந்தித்த 6 ஆட்டங்களில 4-ல் வோஸ்னியாக்கியும், 2-ல் ஹாலெப்பும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நடால், கிவிடோவா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடால், செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி - ஷரபோவாவும் வெளியேற்றம்
ஆஸ்திரேலியஓபன் டென்னிஸ் போட்டியில், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜாம்பவானான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இளம் வீரர் சிட்சிபாசிடம் வீழ்ந்தார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.