ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி சாம்பியன்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி சாம்பியன்
x
தினத்தந்தி 27 Jan 2018 11:00 PM GMT (Updated: 27 Jan 2018 7:58 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய பரபரப்பான இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 7-6 (7-2), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) சாய்த்து முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சிமுகர்ந்தார். டென்மார்க் நாட்டவர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். வெற்றியின் மூலம் வோஸ்னியாக்கி, தரவரிசையில் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறினார். ரூ.20 கோடியை பரிசுத்தொகையாக அள்ளிய 27 வயதான வோஸ்னியாக்கி கூறுகையில், ‘இந்த தருணத்துக்காகத் தான் பல ஆண்டுகளாக கனவு கண்டேன். அந்த கனவு இப்போது நனவாகி இருக்கிறது’ என்றார். ஹாலெப்புக்கு ரூ.10 கோடி கிடைத்தது.

இன்று நடக்கும் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் பெடரர் (சுவிட்சர்லாந்து)- மரின் சிலிச் (குரோஷியா) மோதுகிறார்கள்.

Next Story