டென்னிஸ்

தேசிய டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் சரத்கமல் ‘சாம்பியன்’ + "||" + National Table Tennis: Tamil Nadu Player Sarath Kamal's 'Champion'

தேசிய டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் சரத்கமல் ‘சாம்பியன்’

தேசிய டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் சரத்கமல் ‘சாம்பியன்’
79–வது தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது.

ராஞ்சி,

79–வது தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழக வீரர்கள் சரத்கமல்–அமல்ராஜ் ஆகியோர் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சரத்கமல் 6–11, 11–6, 15–13, 11–8, 11–8 என்ற செட் கணக்கில் அமல்ராஜை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். சரத்கமல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது இது 8–வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை தேசிய ஒற்றையர் பட்டத்தை வென்று இருந்த மராட்டிய வீரர் கம்லேஷ் மேக்தாவின் சாதனையை சரத்கமல் சமன் செய்தார்.