டென்னிஸ்

சென்னை ஓபன் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி 12–ந் தேதி தொடங்குகிறது + "||" + Chennai Open Challengers Tennis Tournament Starting on 12th

சென்னை ஓபன் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி 12–ந் தேதி தொடங்குகிறது

சென்னை ஓபன் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி 12–ந் தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் ரூ.32 லட்சம் பரிசுத் தொகைக்கான சென்னை ஓபன் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி

சென்னை,

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் ரூ.32 லட்சம் பரிசுத் தொகைக்கான சென்னை ஓபன் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 12–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை நடக்கிறது. தகுதி சுற்று ஆட்டங்கள் 10 மற்றும் 11–ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் உலக தரவரிசையில் 94–வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சன், இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி, சகெத் மைனெனி, சுமித் நாகல், பிராஜ்னேஷ் குணேஸ்வரன் உள்பட பலர் பிரதான சுற்றில் நேரடியாக பங்கேற்கின்றனர். இந்திய வீரர்கள் 4 பேருக்கு வைல்டு கார்டு வழங்கப்படுகிறது. இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். ஜோர்டான் தாம்சன், யுகி பாம்ப்ரி ஆகியோருக்கு போட்டி தரநிலையில் முறையே முதல் 2 இடங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.