டென்னிஸ்

பெட் கோப்பை டென்னிஸ் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம் + "||" + Pet Cup tennis match Start Today in Delhi

பெட் கோப்பை டென்னிஸ் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்

பெட் கோப்பை டென்னிஸ் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்
பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்று ஆட்டம் டெல்லியில் இன்று (புதன்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி,

பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்று ஆட்டம் டெல்லியில் இன்று (புதன்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் சீனதைபே, தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று சீனாவை சந்திக்கிறது. இந்திய அணியில் அங்கிதா பாம்ப்ரி, அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர், பிரார்த்தனா தோம்பரே, பிரான்ஜலா யாட்லாபாலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி உலக குரூப்-2 பிரிவு பிளே-ஆப் சுற்று ஆட்டத்துக்கு முன்னேறும்.