டென்னிஸ்

பெட் கோப்பை டென்னிஸ்: இந்திய அணிக்கு முதல் வெற்றி + "||" + Pet Cup Tennis: First win of the Indian team

பெட் கோப்பை டென்னிஸ்: இந்திய அணிக்கு முதல் வெற்றி

பெட் கோப்பை டென்னிஸ்: இந்திய அணிக்கு முதல் வெற்றி
பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய–ஓசியானா குரூப்–1 சுற்று ஆட்டம் டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய–ஓசியானா குரூப்–1 சுற்று ஆட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதில் ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் கர்மான் கவுர் 6–3, 6–4 என்ற நேர்செட்டில் எடிசி ஷோங்கையும் (ஹாங்காங்), அங்கிதா ரெய்னா 6–3, 6–2 என்ற நேர்செட்டில் லின் ஷாங்கையும் (ஹாங்காங்) தோற்கடித்தனர். இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் பிரார்த்தனா தோம்பரே–பிரான்ஜலா யட்லாபாலி ஜோடி 6–2, 6–4 என்ற நேர்செட்டில் வான் யாய்–ஷிங் ஹூ வு இணையை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் ஹாங்காங்கை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது. இந்திய அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் கடைசி இடம் பிடித்த சீனதைபே அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி குரூப்–1–ல் நீடிக்கும். தோல்வி பெறும் அணி குரூப்–2–க்கு தள்ளப்படும்.தொடர்புடைய செய்திகள்

1. முன்னணி 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடக்கம்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
2. உலக டூர் டென்னிஸ்: ரபெல் நடால் விலகல்
உலக தரவரிசையில் டாப்–8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 11–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை நடக்கிறது.
3. பெண்கள் டென்னிஸ் போட்டி: உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ‘சாம்பியன்’ ரூ.17¼ கோடியை பரிசாக அள்ளினார்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
4. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் ஸ்விடோலினா, ஸ்டீபன்ஸ்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
5. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார்.