டென்னிஸ்

பெட் கோப்பை டென்னிஸ்: சீனதைபே அணியை வென்றது இந்தியா + "||" + Pet Cup tennis India won the Chinese Taipei team

பெட் கோப்பை டென்னிஸ்: சீனதைபே அணியை வென்றது இந்தியா

பெட் கோப்பை டென்னிஸ்: சீனதைபே அணியை வென்றது இந்தியா
டெல்லியில் நடந்த பெண்களுக்கான பெட் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசியா-ஓசியானியா குரூப்1 சுற்றில் கடைசி நாளான நேற்று இந்திய அணி சீனதைபேயை எதிர்கொண்டது.
புதுடெல்லி,

இதில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-4, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் சியா-யு ஹூவை (சீனதைபே) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 54 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கம்ரன் கவுர் தாண்டி (இந்தியா) 7-6 (4), 6-3 என்ற நேர் செட்டில் லீ பெய் சியை (சீனதைபே) வென்றார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி ஆசியா-ஓசியானியா குரூப்1 சுற்றில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்து உலக குரூப் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.