டென்னிஸ்

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் முதல் சுற்றில் யுகி பாம்ப்ரி வெற்றி + "||" + Chennai Open Challenger Tennis In the first round Yuki Pompry win

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் முதல் சுற்றில் யுகி பாம்ப்ரி வெற்றி

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் முதல் சுற்றில் யுகி பாம்ப்ரி வெற்றி
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 2–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6–1, 7–6 (7–3) என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் பெர்னாபே ஜபதாவை வீழ்த்தி 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்ப்சன் 6–4, 6–2 என்ற நேர்செட்டில் எகிப்து வீரர் கரிம் முகமதுவை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அபினவ் சஞ்சீவ் சண்முகம், எதிர்த்து ஆடிய ரஷிய வீரர் இவான் நெடில்கோ காயத்தால் விலகியதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அதே சமயம் இந்திய வீரர் பிராஜ்னேஷ் குணேஸ்வரன் 1–6, 4–6 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் பெட்ரி மார்டினஸ்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார். டானிலோ பெட்ரோவிச் (செர்பியா), யாசுதாகா உஷியமா (ஜப்பான்), செம் இகெல் (துருக்கி), என்ரிக்ஸ் லோபெஸ் (ஸ்பெயின்) ஆகியோரும் வெற்றி கண்டனர்.