டென்னிஸ்

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் யுகி பாம்ப்ரி கால்இறுதிக்கு தகுதி + "||" + Chennai Open Challenger Tennis Yuki Bhambri qualifies for quarter-finals

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் யுகி பாம்ப்ரி கால்இறுதிக்கு தகுதி

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் யுகி பாம்ப்ரி கால்இறுதிக்கு தகுதி
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6–2, 6–3 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் சித்தார்த் ரவாத்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்ப்சன் 6–3, 6–2 என்ற நேர்செட்டில் விஷ்யா தோங்‌ஷரேன்சைகுலை (தாய்லாந்து) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் எகிப்து வீரர் முகமது சப்வாத் 6–4, 6–2 என்ற நேர்செட்டில் இந்திய வீரர் அர்ஜூன் காதேவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் டானிலா பெட்ரோவிச் (செர்பியா), பெட்ரோ மார்ட்டினஸ் (ஸ்பெயின்), அன்டோய்ன் எஸ்கோபியர் (பிரான்ஸ்), டுக் ஹீ லீ (தென்கொரியா), யசுதகா உஷியமா (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி 7–5, 6–3 என்ற நேர்செட்டில் அலெஸ்சான்ட்ரோ பெகா (இத்தாலி)–கிம்மெர் (பெல்ஜியம்) இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அரைஇறுதியில் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி, சகெத் மைனெனி (இந்தியா)–லூகா மார்காரோலி (சுவிட்சர்லாந்து) இணையைச் சந்திக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார்.
2. ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
3. ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை
ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்தியன், அந்தோணி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.
4. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் இந்தியா தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடந்து வருகிறது.
5. இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ராஜா-ஜுனைத் இணை முன்னேற்றம்
இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராஜா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜுனைத் இணை இறுதி போட்டிக்கு முன்னேறியது.