டென்னிஸ்

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி ‘சாம்பியன்’ + "||" + Chennai Open Challenger Tennis Sriram Balaji-Vishnuvardhan's pair of 'champion'

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி ‘சாம்பியன்’

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி ‘சாம்பியன்’
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 5–வது நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் இணை, செம் இல்கெல் (துருக்கி)–டானிலோ பெட்ரோவிச் (செர்பியா) ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி 7–6 (7–5), 5–7, 10–5 என்ற செட் கணக்கில் செம் இல்கெல்–டானிலோ பெட்ரோவிச் இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஸ்ரீராம் பாலாஜி ஜோடி வென்ற 4–வது சேலஞ்சர் பட்டம் இதுவாகும். பட்டம் வென்ற இந்திய ஜோடிக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகையுடன் 80 ஏ.டி.பி.புள்ளியும் கிடைத்தன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 7–5, 6–2 என்ற நேர்செட்டில் தென்கொரியா வீரர் டுக் ஹீ லீயை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்ப்சன் 6–1, 7–6 (7–5) என்ற நேர்செட்டில் பெட்ரோ மார்டினஸ்சை (ஸ்பெயின்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் யுகி பாம்ப்ரி–ஜோர்டான் தாம்ப்சன் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. முன்னணி 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடக்கம்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
2. உலக டூர் டென்னிஸ்: ரபெல் நடால் விலகல்
உலக தரவரிசையில் டாப்–8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 11–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை நடக்கிறது.
3. பெண்கள் டென்னிஸ் போட்டி: உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ‘சாம்பியன்’ ரூ.17¼ கோடியை பரிசாக அள்ளினார்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
4. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் ஸ்விடோலினா, ஸ்டீபன்ஸ்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
5. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார்.