டென்னிஸ்

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் யுகி பாம்ப்ரி தோல்வி + "||" + Chennai Open Challenger Tennis: Yuki Bhambri failed in the final

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் யுகி பாம்ப்ரி தோல்வி

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் யுகி பாம்ப்ரி தோல்வி
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 112–வது இடத்தில் உள்ள இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, 101–வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்ப்சனை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 5–7, 6–3, 5–7 என்ற செட் கணக்கில் ஜோர்டான் தாம்ப்சனிடம் தோல்வி கண்டு பட்ட வாய்ப்பை இழந்தார். இந்த ஆட்டம் 2½ மணி நேரம் நீடித்தது.