டென்னிஸ்

தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் சாம்பியன் + "||" + New York Open Tennis South African player Kevin Anderson Champion

தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் சாம்பியன்

தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் சாம்பியன்
நியூயார்க் ஓபன் டென்னிஸ் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.
நியூயார்க்,

நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 4-6, 6-3, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் 12-ம் நிலை வீரர் சாம் குயரியை (அமெரிக்கா) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கெவின் ஆண்டர்சன் கைப்பற்றிய 4-வது ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இதன் மூலம் அவர் தரவரிசையில் 2 இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்தார்.