‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்


‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2018 10:30 PM GMT (Updated: 21 Feb 2018 7:42 PM GMT)

அறுவை சிகிச்சை மூலம் செரீனா வில்லியம்சுக்கு பிரவசம் நடந்தது.

நியூயார்க்,

அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் என்று பெயர் வைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் செரீனா வில்லியம்சுக்கு பிரவசம் நடந்தது. பிரசவத்திற்கு பிறகு தான் சந்தித்த கஷ்டத்தை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரையில், ‘எனது மகள் ஒலிம்பியா பிறந்த பிறகு நான் உயிர் பிழைத்து வருவேனா? என்று அச்சம் ஏற்பட்டது. குழந்தை பிறந்த பிறகு எனக்கு பலவிதமான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நுரையீரல் தொற்றுநோய் காரணமாக எனக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றன. மிகத்திறமையான டாக்டர்கள் மற்றும் செவிலியர்களால் நான் பழைய நிலைக்கு திரும்பினேன். சிக்கலான தருணங்களை எப்படி கையாள வேண்டும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்து இருந்தார்கள். அவர்கள் சரியான தொழில்முறை கவனிப்பை அளிக்காமல் இருந்து இருந்தால் இன்று நான் உயிருடன் இருந்து இருக்கமாட்டேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Next Story