இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி
x
தினத்தந்தி 9 March 2018 10:15 PM GMT (Updated: 9 March 2018 8:10 PM GMT)

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

இண்டியன்வெல்ஸ், 

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), கஜகஸ்தான் வீராங்கனை ஜரினா டையாசை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-3 என்ற நேர்செட்டில் ஜரினா டையாசை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 36 வயதான செரீனா குழந்தை பெற்ற பிறகு கண்ட முதல் வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் ஹீதர் வாட்சனை (இங்கிலாந்து) தோற்கடித்தார்.

வெற்றிக்கு பிறகு செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், ‘இந்த ஆட்டத்துக்கு முன்பு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். கிட்டத்தட்ட அழுகையே வந்து விட்டது. அடிக்கடி எனது மகள் நினைப்பே வந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக இந்த ஆட்டம் இரவில் நடந்தது எனக்கு வசதியாக போய்விட்டது. அப்போது எனது மகள் தூங்கி கொண்டு இருப்பார் என்பதால் நிம்மதியாக விளையாட முடிந்தது’ என்றார்.

Next Story