டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: கிவிடோவா, முகுருஜா அதிர்ச்சி தோல்வி + "||" + Individuals tennis: Kiwitova, Muguruga shocked

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: கிவிடோவா, முகுருஜா அதிர்ச்சி தோல்வி

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: கிவிடோவா, முகுருஜா அதிர்ச்சி தோல்வி
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் கிவிடோவா, முகுருஜா அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
இண்டியன்வெல்ஸ்,

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை விம்பிள்டன் சாம்பியனான கிவிடோவா (செக் குடியரசு) 7-6 (7-4), 6-7 (3-7), 4-6 என்ற செட் கணக்கில் துலியா புதின்சேவாவிடம் (கஜகஸ்தான்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த ஆட்டம் 3 மணி 17 நிமிடம் நீடித்தது. இதேபோல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-2, 5-7, 1-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய 100-ம் நிலை வீராங்கனை சாஷியா விக்கெர்ரியிடம் (அமெரிக்கா) தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.


மற்றொரு ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை (செக் குடியரசு) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), குஸ்னெட்சோவா (ரஷியா) பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு), ராட்வன்ஸ்கா (போலந்து), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தோல்வி கண்டு நடையை கட்டினார்கள்.