டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : சிமோனா ஹாலெப் 4-வது சுற்றுக்கு தகுதி + "||" + IndianWells Tennis : Simona Halleb qualifies for the 4th round

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : சிமோனா ஹாலெப் 4-வது சுற்றுக்கு தகுதி

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : சிமோனா ஹாலெப் 4-வது சுற்றுக்கு தகுதி
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இண்டியன்வெல்ஸ், 

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா), 165-ம் நிலை வீராங்கனை கரோலின் டோலிஹிடேவை (அமெரிக்கா) சந்தித்தார். இதில் சிமோனா ஹாலெப் 1-6, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் கரோலின் டோலிஹிடேவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் வைல்டு கார்டு மூலம் களம் கண்ட அமெரிக்க ஓபன் ஜூனியர் சாம்பியனான 16 வயது அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள கிவிடோவாவுக்கு (செக்குடியரசு) அதிர்ச்சி அளித்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ 3-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் காயத்தில் இருந்து மீண்டு வந்த முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-7 (3-7), 6-4, 1-6 என்ற செட் கணக்கில் 109-ம் நிலை வீரர் தாரோ டேனியலிடம் (ஜப்பான்) தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 110-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் 12-ம் நிலை வீரர் லூகாஸ் போவில்லியை (பிரான்ஸ்) சாய்த்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.