டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு தகுதி + "||" + Individuals tennis Simona Halleb Eligible for quarter finals

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு தகுதி

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு தகுதி
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையரில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையரில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

கால்இறுதியில் ஹாலெப்

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7-5, 6-1 என்ற நேர்செட்டில் சீனாவின் வாங் கியாங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6 (8-6), 6-4 என்ற நேர்செட்டில் 28-ம் நிலை வீரர் அனஸ்டாசிஜா செவாஸ்டோவாவை (லாத்வியா) சாய்த்து கால்இறுதியை உறுதி செய்தார். அதே சமயம் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 4-6, 5-7 என்ற நேர்செட்டில் 19-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் டாரியா கசட்கினாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு), ஒசாகா (ஜப்பான்) நவரோவா (ஸ்பெயின்) ஆகியோரும் வெற்றி கண்டனர்.

யுகி பாம்ப்ரி தோல்வி


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 110-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 7-6 (7-4), 4-6, 4-6 என்ற செட் கணக்கில் 21-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சாம் குயரியிடம் போராடி பணிந்தார். இந்த ஆட்டம் 2 மணி 22 நிமிடம் நீடித்தது.

இன்னொரு ஆட்டத்தில் மரின் சிலிச் (குரோஷியா) 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிலிப் கோல்ஸ்கிரீபெரிடம் (ஜெர்மனி) தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். இதே போல் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), மிலோஸ் ராவ்னிக் (அர்ஜென்டினா), பாக்தாதிஸ் (சைபிரஸ்) உள்ளிட்டோர் 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.