டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்:பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி + "||" + Individuals tennis: Piliskova The shock has failed

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்:பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்:பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செக்குடியரசின் பிளிஸ்கோவா தோல்வி அடைந்தார்.
இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செக்குடியரசின் பிளிஸ்கோவா தோல்வி அடைந்தார்.

அரைஇறுதியில் ஹாலெப்

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் முதல்நிலை வீராங்கனை சிமோன ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் போராடி பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) தோற்கடித்து 3-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.


மற்றொரு கால்இறுதியில் 44-வது இடத்தில் இருக்கும் நோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக் குடியரசு) அதிர்ச்சி அளித்தார். அரைஇறுதியில் சிமோனா ஹாலெப்-நோமி ஒசாகா மோதுகிறார்கள்.

பெடரர் கலக்கல்

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரும், 5 முறை சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆண்டில் தோல்வியையே சந்திக்காத பெடரர் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும். கால்இறுதியில் பெடரர், தென்கொரியாவின் சுங் ஹயோனை எதிர்கொள்கிறார்.

அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போர்டோ தன்னை எதிர்த்த சக நாட்டு வீரர் லினார்டோ மேயரை 3-6, 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் விரட்டினார். இதே போல் பிலிப் கோல்ஸ்கிரீபெர் (ஜெர்மனி), சாம் குயரி (அமெரிக்கா), போர்னா கோரிச் (குரோஷியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் கால்இறுதியை எட்டினர்.