டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்:சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி + "||" + Individuals tennis: Simona Halleb shock failed

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்:சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்:சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் அரைஇறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் அரைஇறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

ஹாலெப் வெளியேற்றம்

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஒசாகா 6-3, 6-0 என்ற நேர் செட்டில் ஹாலெப்பை முதல்முறையாக சாய்த்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.


மற்றொரு அரைஇறுதியில் 19-ம் நிலை வீராங்கனையான டாரியா கசட்கினா (ரஷியா) 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மூத்த வீராங்கனை வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 49 நிமிடங்கள் நீடித்தது.

வெற்றிக்கு பிறகு 20 வயதான கசட்கினா கூறுகையில் ‘உணர்ச்சி மிகுதியால் என்னால் பேச முடியவில்லை. என்னுடைய உச்சபட்ச உணர்ச்சியை விவரிக்க வார்த்தையில்லை. எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த இரவுகளில் இது ஒன்றாகும்’ என்றார்.

டெல்போட்ரோ- ராவ்னிக்

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிலிப் கோல்ஸ்கிரீபெரை (ஜெர்மனி) வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால்இறுதியில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் 7-5, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் சாம் குயரியை (அமெரிக்கா) வெளியேற்றினார்.