டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–டெல்போட்ரோ + "||" + Individuals tennis: Federer-Delphroto in the final

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–டெல்போட்ரோ

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–டெல்போட்ரோ
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) 6–2, 6–3 என்ற நேர் செட்டில் மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். டெல் போட்ரோவின் 400–வது சர்வதேச வெற்றி இதுவாகும்.

மற்றொரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 5–7, 6–4, 6–4 என்ற செட் கணக்கில் 49–ம் நிலை வீரர் போர்னா கோரிச்சை (குரோஷியா) போராடி சாய்த்து இறுதிசுற்றை எட்டினார். இந்த ஆண்டில் தோல்வியையே சந்திக்காத 36 வயதான பெடரர் தொடர்ந்து பெற்ற 17–வது வெற்றி இதுவாகும். ஒரு சீசனில் அவரது சிறந்த தொடக்கம் இது தான்.