டென்னிஸ்

மியாமி டென்னிஸ் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தகுதி + "||" + Indian tennis player Yuki Bhambri qualifies for Miami Tennis

மியாமி டென்னிஸ் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தகுதி

மியாமி டென்னிஸ் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தகுதி
மியாமி டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மியாமி,

மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நேற்று தொடங்கியது. ஏப்ரல் 1-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் உலக தரவரிசையில் 107-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, தரவரிசையில் 133-வது இடத்தில் உள்ள இலியாஸ் மெர்ரை (சுவீடன்) எதிர்கொண்டார். இதில் யுகி பாம்ப்ரி 7-5, 6-2 என்ற நேர்செட்டில் இலியாஸ் மெர்ரை தோற்கடித்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னதாக நடந்த முதலாவது ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, உலக தரவரிசையில் 75-வது இடத்தில் உள்ள மிர்சா பாசிச்சை (போஸ்னியா) வீழ்த்தி இருந்தார். பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் ஜாக் சோக்கை சந்திக்கிறார்.