டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜான் இஸ்னர் + "||" + Miami Open Tennis: John Isner at the finals

மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜான் இஸ்னர்

மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜான் இஸ்னர்
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4–வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 7–6 (7–4), 6–2 என்ற நேர்செட்டில் 19–ம் நிலை வீரர் பாப்லோ கார்ரெனோ பஸ்டாவை (ஸ்பெயின்) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 14–வது இடத்தில் உள்ள ஜான் இஸ்னர் (அமெரிக்கா) 6–2, 7–6 (7–2) என்ற நேர்செட்டில் 5–ம் நிலை வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) சாய்த்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். அத்துடன் அவர் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வென்று இருந்த டெல்போட்ரோவின் வெற்றி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்–ஜான் இஸ்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.


ஆசிரியரின் தேர்வுகள்...