டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் சாம்பியன் + "||" + Miami Open Tennis American player John Isner champion

மியாமி ஓபன் டென்னிஸ் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் சாம்பியன்

மியாமி ஓபன் டென்னிஸ் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் சாம்பியன்
மியாமி ஓபன் டென்னிஸ் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 32 வயதான அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர், 20 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை (ஜெர்மனி) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜான் இஸ்னர் 6-7 (4-7), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் 2 மணி 29 நிமிடம் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் ஜான் இஸ்னர் 8 இடங்கள் முன்னேறி உலக தரவரிசையில் 9-வது இடத்தை பிடித்துள்ளார். தோல்வி கண்ட அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முதலிடம் பிடித்துள்ளார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...