டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற பயஸ் புதிய சாதனை + "||" + Paes becomes most successful player in Davis Cup, India back in tie against China

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற பயஸ் புதிய சாதனை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற பயஸ் புதிய சாதனை
டேவிஸ் கோப்பை டென்னிஸில் இரட்டையர் பிரிவில் சீன அணியை தோற்கடித்து, லியாண்டர் பயஸ் புதிய சாதனையை படைத்துள்ளார். #DavisCupPaes
டியான்ஜின்,

மிகவும் பிரபலம் பெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி சீன நாட்டின் டியான்ஜின் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் ஆட்டப் பிரிவில் லியாண்டர் பயஸ் - போபண்ணா ஜோடி சீனாவின் மயோ ஷின் கோங் - ஜீ ஜாங் ஜோடியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதல் சுற்றில் சீன ஜோடி முன்னிலையில் இருந்த (5-7) போதும், அடுத்த இரண்டு சுற்றுகளிலும் லியாண்டர் பயஸ் - போபண்ணா ஜோடி அற்புதமாக விளையாடி, 7-6 மற்றும் 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் டேவிஸ் கோப்பை டென்னிஸில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகள் பெற்று லியாண்டர்பயஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.

44 வயதாகும் லியாண்டர் பயஸ் டேவிஸ் கோப்பை டென்னிஸில் இரட்டையர் பிரிவில் இதுவரை 43 வெற்றிகள் பெற்று புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இதில் பயஸ், மகேஷ் பூபதியுடன் இணைந்து 24 போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...