டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் பிளே-ஆப் சுற்று: செர்பியாவை சந்திக்கிறது இந்தியா + "||" + India is to meet Serbia in the Davis Cup tennis playoffs.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் பிளே-ஆப் சுற்று: செர்பியாவை சந்திக்கிறது இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் பிளே-ஆப் சுற்று: செர்பியாவை சந்திக்கிறது இந்தியா
டேவிஸ் கோப்பை டென்னிஸ் பிளே-ஆப் சுற்றில் செர்பியாவை இந்தியா சந்திக்க உள்ளது.
லண்டன்,

டேவிஸ்கோப்பை டென்னிஸ் ஆசிய-ஓசியானா பிரிவில் சீனாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி மீண்டும் உலக குரூப் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் பிளே-ஆப் சுற்றில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்திய அணி பலம் வாய்ந்த செர்பியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் செப்டம்பர் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை செர்பியாவில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி உலக குரூப்புக்குள் நுழையும். தோல்வி அடையும் அணி தங்களது மண்டல குரூப்1 சுற்றுக்கு விளையாட தரம் இறக்கப்படும்.