டென்னிஸ்

மான்ட்கார்லோ டென்னிஸ்: நடால், ஜோகோவிச் வெற்றி + "||" + Montcorlo tennis: Nadal, Jokovich wins

மான்ட்கார்லோ டென்னிஸ்: நடால், ஜோகோவிச் வெற்றி

மான்ட்கார்லோ டென்னிஸ்: நடால், ஜோகோவிச் வெற்றி
மான்ட்கார்லோ டென்னிஸ் போட்டியில் நடால், ஜோகோவிச் வெற்றி பெற்றனர்.
மான்ட்கார்லோ,

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்ட 10 முறை சாம்பியனும், முதல்நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (2), 7-5 என்ற நேர் செட்டில் போர்னா கோரிச்சை (குரோஷியா) வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார்.