டென்னிஸ்

‘ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ ‌ஷரபோவா உறுதி + "||" + 'No Retirement Plan' Sharapova confirmed

‘ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ ‌ஷரபோவா உறுதி

‘ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ ‌ஷரபோவா உறுதி
உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ‌ஷரபோவா ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாத தடைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் களம் திரும்பினார்.

மாஸ்கோ, 

உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ‌ஷரபோவா ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாத தடைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் களம் திரும்பினார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 31 வயதான ‌ஷரபோவாவின் ஆட்டம் முன்பு போல் சிறப்பாக இல்லாததால் அவர் ஓய்வு பெறக்கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது. இது குறித்து ‌ஷரபோவாவிடம் கேட்ட போது, ‘ஓய்வுக்கு என்று காலக்கெடு எதுவும் நான் நிர்ணயித்து கொள்ளவில்லை. ஓய்வு முடிவை எனது விருப்பத்தின் பேரிலேயே எடுப்பேன். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அது நடக்குமா? என்பது எனக்கு தெரியாது. தொடர்ந்து எனது ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.