டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்; ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம் + "||" + Barcelona Open Tennis; Rafael Nadal progress to quarterfinals

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்; ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்; ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறினார். #BarcelonaOpen #Nadal
பார்சிலோனா,

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னணி வீரரான ரஃபேல் நடால் கில்லர்மோ கார்சியா லோபசை எதிர்கொண்டார். இந்த போட்டியில் நடால் 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் ரஃபேல் நடால் சுலோவேகியா நாட்டின் கிளிசானுடன் மோதவுள்ளார். மேலும் 11வது பார்சிலோனா பட்டத்தினை வெல்வதின் மூலம் அவர் தனது நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்றொரு போட்டியில் பல்கேரியாவை சேர்ந்த கிரிகர் டிமிட்ரோவ், துனிசியாவை சேர்ந்த மாலெக் ஜசிரியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் டிமிட்ரோவ் 7-5 3-6 7-6(8) என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு நுழைந்தார்


ஆசிரியரின் தேர்வுகள்...