டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசை: பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன் முன்னேற்றம் + "||" + World Tennis Rank: Progressive Gnaneswaran Progress

உலக டென்னிஸ் தரவரிசை: பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன் முன்னேற்றம்

உலக டென்னிஸ் தரவரிசை: பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன் முன்னேற்றம்
உலக டென்னிஸ் தரவரிசையில் பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன் முன்னேறினார்.

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முதல் இடத்தில் தொடருகிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் முதலிடத்தில் நீடிக்கிறார். சீனாவில் சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன் 84 இடங்கள் முன்னேறி 176-வது இடத்தை பிடித்துள்ளார்.

 இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி 2 இடம் பின்தங்கி 85-வது இடத்தையும், ராம்குமார் 5 இடம் சரிந்து 120-வது இடத்தையும் பிடித்தனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா ஒரு இடம் சறுக்கி 23-வது இடத்தையும், திவிஜ் சரண் 2 இடம் பின்தங்கி 43-வது இடத்தையும், லியாண்டர் பெயஸ் 2 இடம் சரிந்து 50-வது இடத்தையும் பெற்றனர்.