டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி, வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி + "||" + Madrid Open Tennis: Simona Hallep win

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி, வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி, வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸில் சிமோனா ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-0 என்ற நேர்செட்டில் மகரோவாவை (ரஷியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஜெலீனா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3-6, 3-6 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் கேமெலியா பெகுவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் அனெட் கோன்டாவெய்ட்டிடம் (எஸ்தோனியா) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். மற்ற ஆட்டங்களில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.