மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 9 May 2018 9:43 PM GMT (Updated: 9 May 2018 9:43 PM GMT)

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 3–6, 6–2, 3–6 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 7–5, 6–3 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ்சை தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–1, 6–4 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6–2, 6–3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீபென்ஸ்சை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 2–6, 2–6 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீராங்கனை பெர்டென்ஸ்சிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து நடையை கட்டினார்.


Next Story