டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஹாலெப் அதிர்ச்சி தோல்வி + "||" + Madrid Open Tennis: Halleb shock failed

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா), 6–ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். இதில் பிளிஸ்கோவா 6–4, 6–3 என்ற நேர் செட்டில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் மாட்ரிட் ஓபனில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஹாலெப்பின் ‘வீறுநடை’ முடிவுக்கு வந்தது. மற்றொரு கால்இறுதியில் கரோலினா கார்சியா (பிரான்ஸ்) 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் கார்லா சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) தோற்கடித்தார்.

ஆண்கள் பிரிவின் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) 6–3, 6–3 என்ற நேர் செட்டில் டேவிட் கோபினை (ஸ்பெயின்) வெளியேற்றினார். இன்னொரு ஆட்டத்தில் கனடா வீரர் டெனிஸ் ‌ஷபோவலோவ் 6–4, 6–4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் மிலோஸ் ராவ்னிக்கை வீழ்த்தினார்.

இதன் இரட்டையர் 2–வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் கூட்டணி 6–4, 6–7 (4), 5–10 என்ற செட் கணக்கில் ரவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா)– மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடியிடம் போராடி வீழ்ந்தது.



தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை
ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்தியன், அந்தோணி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.
2. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் இந்தியா தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடந்து வருகிறது.
3. இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ராஜா-ஜுனைத் இணை முன்னேற்றம்
இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராஜா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜுனைத் இணை இறுதி போட்டிக்கு முன்னேறியது.
4. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நேற்று தொடங்கியது.
5. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா–செர்பியா மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான ஆட்டம் செர்பியாவில் இன்று தொடங்குகிறது.