டென்னிஸ்

மாட்ரிட் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி + "||" + Madrid tennis: Natal shock failed

மாட்ரிட் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) தோற்கடித்தார். இதன் மூலம் களிமண் தரை ஆடுகளத்தில் நடால் தொடர்ச்சியாக 50 செட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு ஆடுகளத்தில் தொடர்ச்சியாக அதிக செட்டுகளை வென்றவர் என்ற சிறப்பை நடால் பெற்றார். இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் ஜான்மெக்கன்ரோ தரைவிரிப்பு ஆடுகளத்தில் (கார்பெட்) தொடர்ந்து 49 செட்டுகளை வென்றதே சாதனையாக இருந்தது. அவரது 34 ஆண்டு கால சாதனையை நடால் முறியடித்து இருக்கிறார்.

நடால் நேற்று கால்இறுதியில் 7-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார். இதில் நடால் 5-7, 3-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா கார்சியாவை (பிரான்ஸ்) வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.



தொடர்புடைய செய்திகள்

1. கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா பிளிஸ்சிஸ், மில்லர் சதம் அடித்து சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2. 10 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டி ‘‘சாதனை படைப்பேன் என்று நினைத்ததில்லை’’ விராட் கோலி பேட்டி
ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டுவேன் என்று நினைத்து பார்த்ததில்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
3. பழங்குடியின மக்களின் மொழிக்கு அகராதி; கோத்தகிரி ஆதிவாசி பள்ளி ஆசிரியைகள் சாதனை
பழங்குடியின் மக்களின் மொழிக்கான அகராதி தயாரித்து கோத்தகிரி ஆதிவாசி பள்ளி ஆசிரியைகள் சாதனை படைத்து உள்ளனர்.
4. தூய்மை இந்தியாவை வலியுறுத்தி மவுன நாடகம் கல்லூரி மாணவிகள் புதிய சாதனை
தூய்மை இந்தியா கருத்தை வலியுறுத்தி 7 மணிநேரம் தொடர்ச்சியாக மவுன நாடகம் நடத்தி கல்லூரி மாணவிகள் புதிய சாதனை நிகழ்த்தி உள்ளனர்.
5. யோகாசனத்தில் சிறுவன் சாதனை
யோகாசனத்தில் சிறுவன் சாதனை படைத்து உள்ளான்.