மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 12 May 2018 7:30 AM GMT (Updated: 12 May 2018 7:30 AM GMT)

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் ரஃபேல் நடால் ஆஸ்திரிய வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். #RafaelNadal

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதியில் உலகின் முதல்நிலை வீரரான ரஃபேல் நடால் 7-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸில் முன்னதாக நடைபெற்ற போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-3, 6-4 என்ற கணக்கில் அர்ஜென்டினாவின் டிகோ வார்ட்ஸ்மேனை வென்றார். இதன் மூலம் அவர் களிமண் தரையில் தொடர்ந்து 50 செட்களை வென்று மெக்கன்ரோவின் சாதனையை முறியடித்தார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஜான் மெக்கன்ரோவின் 34 ஆண்டுக்கால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் நடால்.
 
முன்னதாக, களிமண் தரை டென்னிஸ் மைதானத்தில் அமெரிக்காவின் ஜான் மெக்கன்ரோ தொடர்ந்து 49 செட்களை குவித்திருந்தார். இந்த சாதனையை அவர் 1984ம் ஆண்டு மாட்ரிட் ஓபன் போட்டியில் நிகழ்த்தி இருந்தார். தொடர்ந்து 34 ஆண்டுகள் இச்சாதனை முறியடிக்கப்படாமல் இருந்தது. இதனை அர்ஜென்டினா வீரரை வென்றதன் மூலம் நடால் முறியடித்தார்.

இந்நிலையில், நடால் நேற்று நடந்த கால்இறுதி போட்டியில் 7-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை எதிர்கொண்டார். இதில் நடால் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இதன் முலம் நடாலின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது.

Next Story