தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை; உயர் நீதிமன்ற மதுரை கிளை | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம்- தமிழக அரசு | தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு, கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முற்றுகை போராட்டம் | தூத்துக்குடி கலவரம் : அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆறுதல் | தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வரும் 25-ம் தேதி, திமுக தோழமை கட்சிகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை; உயர் நீதிமன்ற மதுரை கிளை |

டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால், ஹாலெப் + "||" + Italy Open Tennis Quarter final Natal, Halleb

இத்தாலி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால், ஹாலெப்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால், ஹாலெப்
இத்தாலி ஓபன் டென்னிசில் நடால், ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேறினர்.
ரோம்,

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அனெட் கோன்டாவீட் (எஸ்தோனியா) 6-2, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா அஸ்டாபென்கோ (லாத்வியா) தன்னை எதிர்த்த ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) 2-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெளியேற்றினார். தோல்வியை தழுவிய கோன்டாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) மோத இருந்த அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ஹாலெப் விளையாடாமலேயே கால்இறுதியை எட்டியதுடன், தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். ஸ்விடோலினா (உக்ரைன்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) விரட்டி கால்இறுதிக்குள் நுழைந்தார். மரின் சிலிச் (குரோஷியா), காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), போக்னினி (இத்தாலி), டேவிட் கோபின்(பெல்ஜியம்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 6-7 (5), 4-6 என்ற நேர் செட்டில் பாப்லோ கியூவாஸ் (உருகுவே)- மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) இணையிடம் தோற்று நடையை கட்டியது.