டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா + "||" + Italian Open Tennis: Natalie in the final, switolina

இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா

இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா
இத்தாலி ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா ஆகியோர் நுழைந்தனர்.
ரோம்,

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அனெட் கோன்டாவீட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிசுற்றுக்குள் நுழைந்தார்.