செரீனா வில்லியம்ஸ் சிறந்த வீராங்கனை: ரோஜர் பெடரர்


செரீனா வில்லியம்ஸ் சிறந்த வீராங்கனை: ரோஜர் பெடரர்
x
தினத்தந்தி 24 May 2018 6:57 AM GMT (Updated: 25 May 2018 12:46 AM GMT)

செரீனா வில்லியம்ஸ் டென்னிஸின் ஒரு தலை சிறந்த வீராங்கனை என ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா,

ரோஜர் பெடரர், டென்னிஸ் வரலாற்றில் மார்கரெட் கோர்ட், செரீனா வில்லியம்ஸ், ஸ்டெபி கிராப் ஆகியோரைத் தொடர்ந்து ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 4வது நபர் என்ற பெருமை பெற்றவர் ஆவார்.

இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கைச் சந்திப்பில், ‘செரீனா வில்லியம்ஸ் ஒட்டுமொத்த டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த வீராங்கனை ஆவார். அவரின் சாதனைகள் எல்லா காலத்திற்கும் போதுமானதாக இருக்கும். மேலும் வில்லியம்ஸ் முற்றிலும் மாறுபட்ட வளர்ப்பு முறையின் மூலம் வெளி வந்தவர். அவரின் போராட்ட குணத்தின் மூலம் மிகப்பெரிய டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுத்தார். மேலும் வில்லியம்ஸ் 39 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும்,  23 ஒற்றையர் பட்டங்களையும், 14 இரட்டையர் பட்டங்களையும், இரண்டு கலப்பினப் பட்டங்களையும் வென்றுள்ளார். மேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் ஒரே நேரத்தில் வென்ற ஐந்தாவது பெண் டென்னிஸ் ஆட்டக்காரராக திகழ்கிறார். அவரின் இந்த பங்களிப்பு மகத்தானது’ என்று ரோஜர் பெடரர் கூறினார்.

மேலும், செரினா வில்லியம்யம்ஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், தான் அவரை முழுமையாக மதிப்பதாகவும் ரோஜர் பெடரர் தெரிவித்தார்.


Next Story