டென்னிஸ்

டென்னிஸ் தரவரிசையில் பெடரர் மீண்டும் ‘நம்பர் ஒன்’ + "||" + Federer re-enters 'number one'

டென்னிஸ் தரவரிசையில் பெடரர் மீண்டும் ‘நம்பர் ஒன்’

டென்னிஸ் தரவரிசையில் பெடரர் மீண்டும் ‘நம்பர் ஒன்’
டென்னிஸ் தரவரிசையில் பெடரர் மீண்டும் ‘நம்பர் ஒன்’இடத்தைப் பிடித்தார்.
ஸ்டட்கர்ட்,

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 24-ம் நிலை வீரர் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசுடன் மோதினார். 1 மணி 51 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் பெடரர் 6-7 (2), 6-2, 7-5 (2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பெடரர் இறுதி ஆட்டத்தில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை சந்திக்கிறார்.


இந்த வெற்றியின் மூலம் 36 வயதான பெடரர், தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை உறுதிசெய்துள்ளார். நாளை வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் பெடரர் முதலிட அரியணையில் ஏறுவார். ஸ்பெயினின் ரபெல் நடால் 2-வது இடத்துக்கு இறங்குவார்.

ஆசிரியரின் தேர்வுகள்...