டென்னிஸ்

அர்ஜென்டினா டென்னிஸ் வீரருக்கு 6 ஆண்டுகள் விளையாட தடை + "||" + Argentine tennis player banned to play for 6 years

அர்ஜென்டினா டென்னிஸ் வீரருக்கு 6 ஆண்டுகள் விளையாட தடை

அர்ஜென்டினா டென்னிஸ் வீரருக்கு 6 ஆண்டுகள் விளையாட தடை
அர்ஜென்டினா டென்னிஸ் வீரருக்கு 6 ஆண்டுகள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #Argentine
பியூனோஸ் ஏரிஸ்,

அர்ஜென்டினா டென்னிஸ் வீரர் நிகோலஸ் கிக்கர், போட்டிகளில் கலந்து கொள்ள ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

25 வயதாகும் அர்ஜென்டினா வீரர் நிகோலஸ் கிக்கர், தரவரிசையில் 78-வது இடம் வரை முன்னேறி உள்ளார். இந்நிலையில் 2015-ம் ஆண்டு இத்தாலி மற்றும் கொலம்பியாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

ஆனால் நிகோலஸ் கிக்கர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் நிகோலஸ் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணை குழு அறிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு 6 ஆண்டுகள் விளையாடட்தடை  மற்றும் 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 32 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட அர்ஜென்டினா பெண் மீட்பு
அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு பெண், சிறுமியாக இருந்தபோது 1986-ம் ஆண்டில் பொலிவியாவுக்கு கடத்திச் செல்லப்பட்டார். தற்போது 45 வயதாகிற அந்தப் பெண், என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் கிடையாது.
2. அர்ஜென்டினாவில் பிரதமர் மோடியை கேலியாக சித்தரித்த டி.வி. சேனல் - சமூக வலைத்தள ஆர்வலர்கள் கண்டனம்
அர்ஜென்டினாவில், பிரதமர் மோடியை கேலியாக சித்தரித்த டி.வி. சேனலுக்கு சமூக வலைத்தள ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
3. அர்ஜென்டினாவில் ‘ஜி-20’ உச்சி மாநாடு தொடங்கியது: சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார் - சவுதி இளவரசருடனும் பேச்சுவார்த்தை
அர்ஜென்டினாவில் ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது. இதன் இடையே சீன அதிபர் ஜின்பிங்குடனும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடனும் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.