டென்னிஸ்

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி: ரோஜர் பெடரர் அரையிறுதிக்குத் தகுதி + "||" + Halle Open Tennis Tournament: Roger Federer qualifies for semi-finals

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி: ரோஜர் பெடரர் அரையிறுதிக்குத் தகுதி

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி:  ரோஜர் பெடரர் அரையிறுதிக்குத் தகுதி
ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைறுதிச் சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறினார். #RogerFederer
ஹாலே(வெஸ்ட்ஃபாலன்),

ஜெர்மனியின் ஹாலே வெஸ்ட்ஃபாலன் நகரில், க்ராஸ்கோர்ட் ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முந்தைய போட்டியில் பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பைரே-வுக்கு எதிரான ஆட்டத்தில், பெடரர் 6-3, 3-6, 7-6 (9/7) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.


இந்நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 60 இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென்-ஜ 7-6 (7/2) 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இது அவருக்கு 19-வது தொடர்ச்சியான வெற்றியாகும். உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் 10-வது சாம்பியன் பட்டத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து நடைபெற உள்ள அரையிறுதிச் சுற்றில் பெடரர், அமெரிக்க வீரர் டேனிஸ் குட்லா-வை எதிர் கொள்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடக்கிறது
தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட உள்ளது.
2. லண்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
லண்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியமஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
3. ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி: காலிறுதியில் ரோஜர் பெடரர்
ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறினார். #RogerFederer