டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா-கெர்பர் + "||" + Wimbledon tennis Final match Sereena Gerber

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா-கெர்பர்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா-கெர்பர்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு செரீனா வில்லியம்ஸ், கெர்பர் முன்னேறியுள்ளனர்.
லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜெசை வீழ்த்தி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 70 நிமிடங்கள் நடந்தது. குழந்தை பெற்றுக்கொண்டு மறுபிரவேசம் செய்துள்ள 36 வயதான செரீனா அதன் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிப்போட்டியை எட்டியது இதுவே முதல் முறையாகும்.


மற்றொரு அரைஇறுதியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) விரட்டியடித்து விம்பிள்டனில் 2-வது முறையாக இறுதிசுற்றை எட்டினார். ஆக்ரோஷமாக ஆடிய ஆஸ்டாபென்கோ நிறைய தவறுகளை இழைத்தார். பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு எதிராளிக்கு புள்ளிகளை தாரைவார்க்கும் தானாக செய்யக்கூடிய தவறுகளை 36 முறையும், 3 டபுள் பால்ட்டும் செய்ததால் ஆஸ்டாபென்கோவினால் தாக்குப்பிடிக்க முடியாமல் போய் விட்டது. நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் செரீனா- கெர்பர் மோதுகிறார்கள்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-5, 6-7 (7-9), 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். இந்த போராட்டம் 4 மணி 48 நிமிடங்கள் நீடித்தது.

இன்று நடக்கும் ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டங்களில் நடால்- ஜோகோவிச் (செர்பியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஆகியோர் சந்திக்கிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. சீன ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி
சீன ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி, செவஸ்தோவா ஆகியோர் மோத உள்ளனர்.
2. பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஒசாகா- பிளிஸ்கோவா
பசிபிக் ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் ஒசாகா, பிளிஸ்கோவா ஆகியோர் மோத உள்ளனர்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-டெல்போட்ரோ
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், டெல்போட்ரோ ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் காயம் காரணமாக அரைஇறுதியில் பாதியில் விலகினார்.
4. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், சிட்சிபாஸ்
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ‘இளம் புயல்’ சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
5. பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள்
பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி அயர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #WomenWorldCup2018