டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: 97 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா சார்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஆண்டர்சன் + "||" + Kevin Anderson topples marathon man John Isner in longest ever Wimbledon semi-final

விம்பிள்டன் டென்னிஸ்: 97 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா சார்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஆண்டர்சன்

விம்பிள்டன் டென்னிஸ்: 97 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா சார்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஆண்டர்சன்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 97 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா சார்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன். #WimbledonTennis #KevinAnderson
லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த கெவின் ஆண்டர்சன், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் இஷ்னெரை எதிர்கொண்டார். இந்நிலையில் ஆட்டம் துவங்கியதிலிருந்தே இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. 

சுமார் 6 மணி நேரம் 36 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6(6), 6-7(5), 6-7(9), 6-4, 26-24 என்ற செட் கணக்கில் கெவின் ஆண்டர்சன் வெற்றி பெற்றார். ஆல் இங்கிலாந்து கிளப் சார்பில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டமே மிக அதிக நேரம் எடுத்துக் கொண்ட போட்டியாகும். இந்நிலையில் வெற்றி பெற்ற கெவின் ஆண்டர்சன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா சார்பாக சுமார் 97 வருடங்களுக்கு பிறகு விளையாடவுள்ளார் என்ற சிறப்பை பெற்றுள்ளார். முன்னதாக 1921-ஆம் ஆண்டு அதே நாட்டைச் சேர்ந்த ப்ரியான் நோடான் இறுதிப்போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.