டென்னிஸ் ஹால் ஆப் பேம்: ஸ்டிச், சுகோவாவின் பெயர்கள் இணைந்தன


டென்னிஸ் ஹால் ஆப் பேம்: ஸ்டிச், சுகோவாவின் பெயர்கள் இணைந்தன
x
தினத்தந்தி 20 July 2018 2:03 AM GMT (Updated: 20 July 2018 2:03 AM GMT)

முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான ஸ்டிச், சுகோவா ஆகியோரின் பெயர்கள் ஏடிபி டென்னிஸ் ஹால் ஆப் பேமில் இடம் பெற்றுள்ளன. #ATPHallofFame

நியுயார்க்,

பிரபலமான டென்னிஸ் வீரர்களை கெளரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் ஏடிபி டென்னிஸ் ஹால் ஆப் பேமில் இடம் பெற்று வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜெர்மனியின் மைக்கேல் ஸ்டிச்-ன்(49) பெயர் ஏடிபி ஹால் ஆப் பேமில் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த 1991-ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் போரிஸ் பெக்கரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் 1994-ல் யுஎஸ் ஓபன், 1996-ல் பிரெஞ்ச் ஓபன் இறுதிச் சுற்றில் இரண்டாம் இடம் பெற்றார். 18 ஒற்றையர் ஆட்டங்களில் பட்டம் வென்றுள்ளார்.

அதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஹெலனா சுகோவாவின் (53) பெயரும் ஹால் ஆப் பேமில் இடம்பெற்றுள்ளது. அவர் 9 முறை கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவிலும், 5  முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் அவர் 68 வாரங்கள் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story