டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசை: இந்திய வீரர் ராம்குமார் முன்னேற்றம் + "||" + World tennis rankings: Indian ramkumar progress

உலக டென்னிஸ் தரவரிசை: இந்திய வீரர் ராம்குமார் முன்னேற்றம்

உலக டென்னிஸ் தரவரிசை: இந்திய வீரர் ராம்குமார் முன்னேற்றம்
உலக டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் ராம்குமார் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
நியூயார்க்,

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,310 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,080 புள்ளிகள்) 2-வது இடத்தில் நீடிக்கிறார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோர் முறையே 3 முதல் 7 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். டோமினிச் திம் (ஆஸ்திரியா) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஒரு இடம் சரிந்து 9-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஜோகோவிச் (செர்பியா) 10-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் யுகி பாம்ப்ரி ஒரு இடம் ஏற்றம் கண்டு 86-வது இடத்தை பெற்றுள்ளார். அமெரிக்காவின் உள்ள நியூபோர்ட்டில் நடந்த ‘ஹால் ஆப் பேம்’ சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஜான்சனிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பெற்ற இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 46 இடங்கள் முன்னேறி 115-வது இடத்தை பிடித்துள்ளார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலில் கெர்பர் (ஜெர்மனி), ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கிவிடோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி) முறையே 1 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இளையோர் ஒலிம்பிக்: இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம்
இளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
2. இளைஞர் ஒலிம்பிக் போட்டி பளுதூக்குதலில் இந்திய வீரர் தங்க பதக்கம் வென்றார்
இளைஞர் ஒலிம்பிக் போட்டியின் பளுதூக்குதலில் இந்திய வீரர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
3. ஆசிய பாரா விளையாட்டு போட்டி; ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தங்கம் வென்றார்
இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
4. பேட்மிண்டன்: இந்திய வீரர் சாம்பியன்
ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
5. உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கம் வென்றார்
உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கம் வென்றார்.