டென்னிஸ்

மாஸ்கோ ரிவர் கப்: செர்பியா வீராங்கனை “சாம்பியன்” + "||" + Moscow River Cup: Serbia Player "Champion"

மாஸ்கோ ரிவர் கப்: செர்பியா வீராங்கனை “சாம்பியன்”

மாஸ்கோ ரிவர் கப்: செர்பியா வீராங்கனை “சாம்பியன்”
மாஸ்கோ ரிவர் கப் இறுதிப்போட்டியில் செர்பியா வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். #MoscowRiverCup
மாஸ்கோ,

மாஸ்கோ ரிவர் கப் இறுதிப்போட்டியில் 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்று செர்பியா வீராங்கனை சாதனைப் படைத்துள்ளார்.

பெண்கள் டென்னிஸ் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, மாஸ்கோ ரிவர் கப் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ரஷியாவின் அனாஸ்டாசியா போட்டோபோவா மற்றும் செர்பியாவின் ஓல்கா டேனிலோவிச் ஆகியோர் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 7-5, 6-7(1), 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அனாஸ்டாசியா போட்டோபோவாவை வீழ்த்தி ஓல்கா டேனிலோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 17 வயது நிரம்பிய வீராங்கனை பெண்கள் டென்னிஸ் சங்க டைட்டிலை வென்று சாதனையைப் படைத்துள்ளார்.  இறுதிப்போட்டியில் மோதிய இரு வீராங்கனைகளும் 17 வயதே நிரம்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.