டென்னிஸ்

அட்லாண்டா ஓபன் டென்னிஸ், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ‘சாம்பியன்’ + "||" + American player John Isner won the championship in the Atlanda Open Tennis Championships.

அட்லாண்டா ஓபன் டென்னிஸ், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ‘சாம்பியன்’

அட்லாண்டா ஓபன் டென்னிஸ், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ‘சாம்பியன்’
அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்,

அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சக நாட்டு வீரர் ரையான் ஹாரிசனை சந்தித்தார். 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜான் இஸ்னர் 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரையான் ஹாரிசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 33 வயதான ஜான் இஸ்னர் 5-வது முறையாக அட்லாண்டா ஓபன் பட்டத்தை வென்றார். இதற்கு முன்பு 2013, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் இந்த பட்டத்தை வென்று இருந்தார். இதன் மூலம் ஜான் இஸ்னர் அட்லாண்டா ஓபன் பட்டத்தை 5 முறை வென்ற அமெரிக்க வீரர்கள் பட்டியலில் ஜிம்மி கானர்ஸ், ஜான் மெக்கன்ரோ, பீட் சாம்பிராஸ், ஆந்த்ரே அகாசி ஆகியோருடன் இணைந்தார்.